என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ் டிரைவர் கைது"
நாகர்கோவில்:
தக்கலை அருகே முளகு மூடு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜூ, (வயது 24), டிப்ளமோ படித்துள்ளார். முளகுமூடு வயக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜின் (25). இவர் கேரளாவில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.
தற்போது நண்பனின் திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொள்வதற்காக விஜின் ஊருக்கு வந்திருந்தார். நேற்று ஷாஜூ தனது மோட்டார் சைக்கிளில் விஜினை அழைத்துக் கொண்டு கல்லுவிளையில் இருந்து சுவாமியார் மடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கல்லுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஷாஜூ, விஜின் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.
படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ஷாஜூயின் உறவினர் மகேஷ் கொடுத்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வழிவிட்டான் (58) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான ஷாஜூ, விஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று தக்கலை ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.
திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தினமும் காலையில் தனியார் பஸ்சில் வேலைக்கு வருவது வழக்கம். மேலும் வேலை முடிந்து அதே பஸ்சில் ஊர் திரும்புவார். அப்போது அந்த பஸ்சின் டிரைவரான கிளியனூரை சேர்த சூரியா (20)-க்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சூர்யா அவ்வப்போது ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை விராம்பட்டினம் பீச் மற்றும்வெளியூர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியானாள். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுவை குழந்தை நல குழு அதிகாரி ராஜேந்திரனிடம் முறையிட்டனர்.
இதையடுத்து நலக்குழு அதிகாரி ராஜேந்திரன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூரியாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூரியாவை ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் பதுங்கி இருப்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆந்திர மாநிலத்துக்கு சென்று சூரியாவை கைது செய்தனர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். #tamilnews
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயவீரபாண்டி (வயது37), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கயல்விழி (28). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கயல்விழியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி ஜெயவீரபாண்டி தகராறு செய்து வந்தார். நேற்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெய வீரபாண்டி கத்தியால் கயல் விழியை குத்தினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கயல்விழி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவீரபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்